மெட்டா நிறுவனத்திற்கு 25 பில்லியன் டொலர் அபராதம் – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
தனது பயனர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக, மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று 25 பில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றைச் சொந்தமாகக் கொண்ட சமூக ஊடக நிறுவனமான மெட்டா மீது விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதமாக இது கருதப்படுகிறது.
நியூ மெக்சிகோ நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இந்த அபராதம் அந்த மாநிலத்தில் மெட்டாவின் லாபத்தில் கால் பங்கிற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக மெட்டா நிறுவனத்தின் நிர்வாகிகள், பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கி வந்தது நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே மேற்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




