இலங்கை

இலங்கையில் கேக் விலையில் ஏற்பட உள்ள மாற்றம்

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 190 முதல் 195 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், பட்டர், முட்டை போன்றவையும் அதிக விலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ பட்டர் கேக்கின் விலை 1000 முதல் 1200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கேக் விலையும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்