செய்தி வட அமெரிக்கா

உயிர் தப்பியது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

தம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்நேரம் தாம் இறந்திருக்க வேண்டியது என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாம் உயிர்தப்பியது ஓர் அதிசயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் சரியான நேரத்தில் தலையைத் திருப்பியதாக டிரம்ப் கூறியுள்ளார்.

காதை உரசிச் சென்ற தோட்டா உயிரைப் பலிவாங்கியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பிறகு ட்ரம்ப் தமது தேர்தல் பிரசாரத்தை மீண்டும் தொடங்க மில்வாவ்க்கி (Milwaukee) சென்றுள்ளார்.

குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு 4 நாள்களுக்கு அங்கு நடைபெறும். நம்வபர் மாதத் தேர்தலில் களமிறங்கக் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக 78 வயது ட்ரம்ப் உறுதிசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பகிறது.

தமது துணை ஜனாதிபதி வேட்பாளரையும் அவர் அந்தக் கூட்டத்தில் விரைவில் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி