வட அமெரிக்கா

36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்ய பரிசீலனை செய்யும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கூடுதலாக 36 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், குடியரசுக் கட்சித் தலைவர் 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்,

அமெரிக்காவை “வெளிநாட்டு பயங்கரவாதிகள்” மற்றும் பிற தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்தே மேற்படி கூடுதல் நாடுகளையும் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்