இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.விஜயகுமாருக்கு அஞ்சலி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான க.விஜயகுமார் அவர்கள் நேற்று (14) சுகயீனம் காரணமாக காலமாகியுள்ளார்.

சுகயீனம் காரணமாக நேற்று (14) யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் இவரின் பூதவுடலுக்கு கட்சி கொடியினை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்

அன்னார் க.விஜயகுமார் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புகள் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட இலங்கை அரசினுடைய அத்துமீறல் செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர ஆவார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்