ஐரோப்பா

இத்தாலியில் சம்பள உயர்வு கோரி பேரணியாக சென்ற முப்படையினர்

இத்தாலியின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த சுமார் 6,000 உறுப்பினர்கள் நேற்றைய தினம் ரோம் நகரில் பேரணியாக சென்றனர்.

அதிக ஊதியம், சிறந்த ஓய்வூதியம் மற்றும் வலுவான பணியிடப் பாதுகாப்புகளைக் கோரி அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கராபினேரி (Carabinieri ) மற்றும் கார்டியா டி ஃபினான்சா (Guardia di Finanza) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

சுமார் 430,000 இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் புதுப்பித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மாதாந்திர ஊதியத்தில் 188 யூரோ உயர்வும், ஒருமுறை வழங்கப்படும் நிலுவைத் தொகையாக 2448 யூரோவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த உயர்வு அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்