இத்தாலியில் டிராம் தடம் புரண்டு விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
இத்தாலியின் மிலன் நகரில் டிராம் ஒன்று தடம் புரண்டதில் இருவர் உயிரழந்துள்ளதுடன், 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இத்தாலியின் நிதித் தலைநகரில் உள்ள ஒரு முக்கியப் பாதையான விட்டோரியோ வெனெட்டோ அவென்யூவில் (Vittorio Veneto avenue) நேற்று இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஓட்டுநர் தண்டவாளங்களை மாற்றத் தவறியதாகவும், அதிவேகத்தில் பயணித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், மிலன் மேயர் பெப்பே சாலா (Beppe Sala) மனிதத் தவறுதான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
மிலன் பொதுப் போக்குவரத்து நிறுவனமான ஏடிஎம், சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தை அறிய நிறுவ வழக்குரைஞர்களுடன் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.





