இலங்கை செய்தி

மதுபோதையால் நேர்ந்த சோகம் – கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபொழுது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா சஞ்சீவன் – 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிக மது போதையில் பயணித்ததாலே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை