இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பம் – சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு

இலங்கையில் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்ணாடிகள் அணிவதன் மூலம் சில கண் பிரச்சினைகள் வராதவாறு தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், நேரடி சூரிய ஒளியால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் வைத்தியர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்தது உனவும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்