அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் தயாரிப்பு சாதனங்களில் ‘i’என்ற முதல் வார்த்தையின் அர்த்தம் இது தான்

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்களின் பெயருடன் ‘i’உடன் தொடங்குகிறது. இந்த எழுத்து எதற்காகச் சேர்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

iphone, ipad, ipod ஆகியவற்றில் “i” முதலில் வருவது எதற்காக என்று எப்போதாவது யோசித்திருக்கீர்களா?

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் அதன் சின்னமான ஆப்பிளை அனைத்து சாதனங்களிலும் குறியிட்டிருக்கும். அதுபோன்று இந்த i எழுத்தும் மிகவும் பிரசதிப்பெற்ற பெயராகும்.

“i” எழுத்தைக் கொண்டிருக்கும் அனைத்து சாதனங்களும் மிகப்பெரிய செல்வாக்குமிக்க சிறப்புத் தொழில்நுட்பம் நிறைந்த சாதனங்களாகும்.

1998யில் முதன் முதலில் “i” எனும் வார்த்தை imac உடன் தொடங்கியது. இந்த வெளியீட்டின் போது அதன் தலைமை நிர்வாகியான ஸ்டீவ் ஜாப்ஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் “i” எழுத்திற்கு விளக்கும் கூறுகையில், “i” என்பது ஒரு சீரற்ற எழுத்து அல்ல என்று கூறினார்.

“i” எழுத்து மிக முக்கிய ஐந்து கருத்துக்களைத் தனித்துவமாகப் பிரதிபலிக்கிறது. இணையம், தனிநபர், அறிவுறுத்தல், தகவல் மற்றும் ஊக்கம் உள்ளிட்ட அனைத்தும் இந்த எழுத்து சிறப்பாக பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

“i” என்ற தனிப்பட்ட பிரதிப்பெயர் மற்றும் கல்வியியல் அறிவுறுத்தல் ஆகியவற்றுடன் ஒரு தொடர்பை இணைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்