ஆசியா

சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 33 வயதுப் பெண் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகாரியின் கைத்துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சூ டிங் (Xu Ting) சட்டவிரோதமாய் ஆயுதம் வைத்திருந்ததாக ஆயுதக் குற்றச்செயல் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

நேற்று முன்தினம் சூ மலேசியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டபின், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குத் திரும்பியதாக நம்பப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த அவர், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் பெண் அதிகாரியிடம் இருந்து கைத்துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டு சொல்கிறது.

அவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். சூவின் வழக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து முதல் பத்தாண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்