செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய திருடன் – வீடுகளில் சிக்கிய கடிதம்

அமெரிக்காவில் வீடுகளுக்குள் புகுந்து கடிதம் விட்டுச்செல்லும் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

வாஷிங்டன் மாநிலத்தில் Yelm வட்டாரத்தில் Clearwood பகுதியில் ஒருவர் தனது வீட்டுக்குள் சென்றபோது மேசையில் ஒரு கடிதத்தை அவதானித்துள்ளார்.

‘எனக்கு மிகவும் பசித்ததால் வீட்டிற்குள் புகுந்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுடைய உணவைச் சாப்பிட்டேன். நான் குளித்தேன்…ஆடைகளைச் சலவை செய்தேன்,’ என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

வீட்டின் சன்னல் உடைந்திருப்பதையும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதையும் கண்ட Eddie Andujo என்ற நபர் அதிர்ச்சியடைந்தார்.

ஆனால் வீட்டிலிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. வீட்டுக்குள் புகுந்தவர் தாம் பயன்படுத்திய போர்வைகளை மடித்து வைத்துள்ளதுடன், தட்டுகளைக் கழுவி வைத்துள்ளார்.

அடுத்த சில நாள்களில் அண்டை வீடுகளிலும் ஒருவர் அத்துமீறிப் புகுந்தது தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி