வட அமெரிக்கா

கனடாவில் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடிக்கச் சென்ற சிறார்களுக்கு நேர்ந்த கதி

கனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.

மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.எனினும் அந்த நான்கு பேரும் உயிரிழந்து விட்டதாக பின்னர் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நீர் மட்டம் குறைவாக இருந்த போது மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாகவும், திடீரென நீர்மட்டம் உயர்வடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்