உலகம்

மேற்கு ஆபிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்த பேருந்து… 31 பேர் பலியான கொடூரம்!

மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி நாட்டில் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் நேற்று மாலை, பர்கினா பாசோவிற்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் அங்கு பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஐ.நா. அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி உலகளவில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன. ஆனால், உலகளவில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆப்பிரிக்க நாடுகளில் தான் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்