ஐரோப்பா

சரிவடையும் அபாயத்தில் உள்ள கருங்கடல் தானிய ஒப்பந்தம்!

கருங்கடல் தானிய ஒப்பந்தம் சரிவடையும் அபாயத்தில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் வெளியறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதிக்கான தடைகள் குறித்து ஐ.நாவுடன் உடன்படிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், கருங்கடல் தானிய ஒப்பந்தம் செயல்படாது எனக் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவின் தானியங்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு தடைகள் நீட்டிக்கப்பட்டால், அதை சமாளிக்க ஐ.நா உதவ வேண்டும். இதற்காக ஐ.நாவுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டும்.

இந்நிலையில், நைரோபிக்கு விஜயம் செய்த லாவ்ரோவ், ” இந்த மாதம் மாஸ்கோ கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது ஜூலை 17 வரை நீட்டிக்க தயக்கத்துடன் ஒப்புக்கொண்டது.

ஆனால் அதன் சொந்த நலன்களை முன்னேற்ற இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட தானியங்களில் 3% க்கும் குறைவானது உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு சென்றடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்