உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: தெற்கு லெபனானில் கோரத் தாக்குதல்!

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த 24 மணிநேரத்துக்குள் மாத்திரம் 25 இலக்குகள் தகர்க்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லெபனானின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ கட்டமைப்புகளுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

லெபனான் தேசிய செய்தி நிறுவனம் அந்த பிராந்தியத்தில் பலமுறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இஸ்ரேல் இவ்வாறான தாக்குதலை நடத்திவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி