“‘என் பிள்ளை அருகில் இருக்க வேண்டும்’ – நிறைவேறாத இறுதி ஆசை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி ((வயது-79) , புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி […]













