இலங்கை செய்தி

03 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • February 27, 2026
  • 0 Comments

மார்ச் மாதத்துக்குரிய முதல் வார நாடாளுமன்ற அமர்வு 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதிவரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதம் மார்ச் 04ஆம் திகதி நடைபெறும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்புவேளை மீதான […]

செய்தி

தமிழ்ச் செல்வன்மீது தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு உளவு தகவல் கிடைத்தது எப்படி?

  • February 27, 2026
  • 0 Comments

“ சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். “ அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் […]

இலங்கை செய்தி

அச்சுவேலியில் 9 மாடுகளை கடத்தியவர் கைது!

  • February 27, 2026
  • 0 Comments

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவாணி பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஒன்பது மாடுகளைக் கடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் நீண்டகாலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றபோது, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட மாடுகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை!

  • February 27, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இன்று (27) தபால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி வலியுறுத்தப்பட்டது. அத்துடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைவை கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது. மக்கள் தமது கையொப்பத்தை இட்டு, […]

இந்தியா செய்தி

இந்தியா, இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • February 27, 2026
  • 0 Comments

இந்தியா India மற்றும் இஸ்ரேல் Israel ஆகிய நாடுகளுக்கிடையில் 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளினதும் பிரதமர்கள் முன்னிலையிலேயே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் இரு தரப்பு சந்திப்பின்போது தீவிரமாக ஆராய்ந்தனர். அதன்பின்னரே வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யுபிஐ பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு பிரதமர் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி: மேலும் இருவர் காயம்!

  • February 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கிராம பகுதிக்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை, மக்கள் குடியுருப்பு பகுதிக்கு சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யானை தாக்கியதில் 75 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கின்றன. எனவே, தமது […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்: நீதி அமைச்சிடம் மகஜர் கையளிப்பு!

  • February 27, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது.” இவ்வாறுவலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் , பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபை முறைமை நீக்கப்படாது: டில்வின் சில்வா உறுதி!

  • February 27, 2026
  • 0 Comments

“மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாற்று தீர்வைக் கண்டுபிடிக்காமல் அவற்றை நாம் அகற்றமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். தமது இந்திய பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு: ஓ.பி.எஸ். தி.மு.கவுடன் சங்கமம்!

  • February 27, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதல்வாரன அ.தி.மு.கவின் AIADMK மிக முக்கிய தூணாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam தி.மு.கவில் DMK இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் Stalin முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் இன்று சங்கமமானார். தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் […]

இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

  • February 27, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் (Rinku Singh) தந்தை Khachandra Singh இன்று(27) காலமானார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ICC 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருந்த Rinku Singh, தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக இந்த வார தொடக்கத்தில் அணியிலிருந்து வெளியேறிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.