இலங்கை செய்தி

நந்திக்கடலில் சுடடேற்றி மலர்தூவி அஞ்சலி!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரவிகரன் எம்.பி., “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஆகும். ஏராளமான எங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நடுவீதியில் வன்முறை: இரு சிறுமிகள் கைது!

  • May 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் பேருந்து சாரதி, பயணி மற்றும் இரு அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள்மீது தாக்குதல் நடத்திய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேருந்திற்குள் தொடங்கிய இந்த மோதல், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தெருவில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தாக்குமளவிற்கு நீடித்துள்ளது. இத்தாக்குதலில் எவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்குக் காயங்கள் […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு சுவீடனில் உயரிய விருது!

  • May 18, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து பயணமானார். இந்நிலையில் மூன்றாவது நாடாக சுவீடனுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய போர்வீரர்கள் தினம்!

  • May 18, 2026
  • 0 Comments

தேசிய போர்வீரர்கள் தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது என ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன தெரிவித்தார். இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள். […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை 06:00 – 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன. முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட […]

இலங்கை செய்தி

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்!

  • May 18, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை, புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது 16) என்ற சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த் தடாகத்துக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுவன், நீருக்குள் மூழ்கியுள்ளார். உயிரிழந்த சிறுவன் சிறு வயதிலேயே தனது […]

பொழுதுபோக்கு

சரிகமபவின் 3ஆவது Finalist ஆனார் இலங்கை வர்ஜா!

  • May 17, 2026
  • 0 Comments

சரிகமபவின் மூன்றாவது Finalist  ஆக இலங்கை பெண் வர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி சிறுவர்களின் அபாரமான திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுக் கொண்டே செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து 6 மாதங்களை கடந்து விட்டது. இன்னும் 3 வாரத்தில் பிரம்மாண்ட இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. இந்ந நிலையில் கடல் கடந்து சென்று சரிகமபவில் கலக்கி கொண்டிருந்த இலங்கை சிறுமி வர்ஜா சரிகமபவின் 3ஆவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]

ஆஸ்திரேலியா செய்தி

நடுவானில் பயங்கரம்: பணிப்பெண்ணைக் கடித்த பயணி!

  • May 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டுத் தரை இறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு நேற்று மதியம் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் மோசமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த விமானப் பணிப்பெண் […]

செய்தி விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் Kolkata Knight Riders அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து 248 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய Gujarat Titans அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 […]

இலங்கை செய்தி

துப்பாக்கியுடன் உலாவந்த 10 பேர் திருமலையில் கைது!

  • May 17, 2026
  • 0 Comments

திருகோணமலை , கோமரங்கடவல-மல்போறுவ பிரதான வீதியில் துப்பாக்கியுடன் டொல்பின் வேனில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது. கோமரங்கடவல , பாணந்துறை மற்றும் அட்டுலுகம பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள் தூர இடங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும் குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக சென்றவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் […]