அரசியல் இலங்கை செய்தி

உறுதிமொழிகளை மறந்து செயல்பட அரசுக்கு இடமளியோம்!

  • December 10, 2025
  • 0 Comments

  பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம். அதன்மூலம் உண்மை தெரியவரும். அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

தித்வா புயல் கரையை கடந்தாலும் “அரசியல் புயல் ஓயவில்லை”!

  • December 10, 2025
  • 0 Comments

  நாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன், இது விடயத்தில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது பற்றி ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஓரிரு நாட்களுக்குள் சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, “அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே தெரிந்தும் அது […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தம்!

  • November 25, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு […]

அரசியல் இலங்கை

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடை கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது […]

அரசியல் இலங்கை

நுகேகொடை கூட்டம் வெத்து வேட்டு!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இந்த கூட்டம் […]

அரசியல் இலங்கை

ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்! 

  • November 21, 2025
  • 0 Comments

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்! 

  • November 13, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார். “ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் […]

அரசியல் இலங்கை

வரவு செலவு திட்டம்!! மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு

  • November 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் […]

அரசியல் இலங்கை

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்

  • November 7, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!