கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 27 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலால் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர் தகாசென்கோ Tymur Tkachenko, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஒரு கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது” […]




