ரோபோ நாய்கள் கொள்வனவு – 2 மில்லியன் டொலர் ஒதுக்கீடு
அமெரிக்காவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது அபாயகரமான இடங்களை ஆய்வு செய்ய ரோபோ நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) 2 மில்லியன் டொலர்வரை செலவிட தீர்மானித்துள்ளது. திட்டமிடப்பட்ட இந்தக் கொள்முதலில், பாஸ்டன் டைனமிக்ஸின் நான்கு கால்கள் கொண்ட ஸ்பாட் ரோபோக்களும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களும் அடங்கும். அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, அபாயகரமான அல்லது அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன்பு, அவற்றை தொலைவிலிருந்து மதிப்பிட […]



