புலிகளின் சித்தாந்தம் சர்வதேசத்தில் தோற்கடிக்கப்படவில்லை: புலம்புகிறது மஹிந்த அணி!
“இலங்கையில் புலி பயங்கரவாதம் பௌதீக ரீதியாக அழித்தொழிக்கப்பட்டாலும் அதன் பின்னணியிலுள்ள சித்தாந்தம் சர்வதேச ரீதியில் இன்னும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன Sanjeeva Edirimanna தெரிவித்த்தார். நாமல் ராஜபக்ச லண்டனில் முன்னெடுக்கப்படவிருந்த கலந்துரையாடல்கள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “உலகின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு […]













