பிலியந்தலவில் சந்தேகநபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
பிலியந்தலவின் வீரசிங்க மாவத்த பகுதியில், இரு சந்தேகநபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான சோதனையின்போது சந்தேகநபர்கள் மீது இன்று காலை (19) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்தேகநபர்களை நிறுத்தி சோதனையிட அதிகாரிகள் முயன்றபோது, சந்தேக நபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சந்தேக நபர் காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக […]




