உலகம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள அமண்டா புயல் தொடர்பில் அறிவுறுத்தல்!

  • June 3, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் அமண்டா (Amanda) எனப் பெயரிடப்பட்ட வெப்பமண்டல புயல் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியா தீபகற்பத்திற்கு மேற்கே சுமார் 1,475 மைல் தொலைவில் இந்தப் புயல் நிலைக்கொண்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்தப் பருவத்தின் முதல் வெப்பமண்டல சூறாவளியாகும். புயலின் தற்போதைய காற்றின் வேகம் மணிக்கு 40 மைல் ஆகும். அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் வலுப்பெற்று, வார இறுதியில் பலவீனமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.    

error: Content is protected !!