ஆற்றங்கரைக்கு அருகில் கரையொதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் தீவிர விசாரணை
இலங்கை – மொரட்டுமுல்லாவில் தச்சுப் பட்டறைக்குப் பின்னால் உள்ள ஆற்றங்கரைக்கு அருகில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. தச்சுப் பட்டறையின் உரிமையாளர் குறித்த தலையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தலையை கைப்பற்றியதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொரட்டுவ பதிலாள் நீதிபதியும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். குறித்த தலையானது மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்டிருக்கலாம் எனவும் […]



