நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் பாடசாலைகள் மூடல்
நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களின் கீழ் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (03) மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய மாகாணங்களில் நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



