இலங்கை

சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகளை குறைக்க தீர்மானம்

  • September 5, 2026
  • 0 Comments

சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகளை 05 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை உணவகம் மற்றும் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன், எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலைக் குறைப்பைப் பொறுத்து உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும் என்று கூறினார்.