லூசியானாவில் துப்பாக்கிச் சூடு: 8 சிறுவர்கள் பலி
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். லூசியானாவின் தெற்கு ஸ்ரீவ்போர்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மூன்று வீடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து வாகனமொன்றைக் கடத்தித் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது பொலிஸார் அவரைத் துரத்திச் சென்று சுட்டதில், அவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களில் சிலருக்கு குறித்த […]




