11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ […]













