கச்சத்தீவு இலங்கையின் சொத்து: தமிழக அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதிலடி
கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (04) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் […]













