ஐரோப்பா

சுவிஸில் கத்திக் குத்து தாக்குதல்! காணொளி இணைப்பு!

  • May 28, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள  வின்டர்தூர் ரயில் நிலையமொன்றில் இன்று கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள்  28, 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயது சுவிஸ் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்தாரி “அல்லாஹு அக்பர்” என்று கத்துவதுபோன்ற காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://twitter.com/i/status/2059939030893035839

உலகம்

சீனாவில் உணவகம் ஒன்றில் கத்தி குத்து தாக்குதல் – ஜப்பானிய பிரஜைகள் இருவர் காயம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா – ஷாங்காயில் (Shanghai) உள்ள உணவகம் ஒன்றில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த  தாக்குதலில் இரண்டு ஜப்பானிய ஆண்களும் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தாக்குதல்தாரி 59 வயதுடையவர் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா (Minoru Kihara) சம்பவம் குறித்து சீன அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.