நீதி தவறிய நீதிமன்றம் : 36 ஆண்டுகள் சட்டப் போராட்டம்!! இழப்பீடு வழங்க உத்தரவு
ஸ்பெயினில் தான் செய்யாத குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு 2.5 மில்லியன் யூரோக்கள் (2.87 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991-ல் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்த, மொராக்கோவைச் சேர்ந்த அகமது டொம்மூஹி, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கட்டலோனியாவில் நடந்த இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஒரு கொள்ளை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். […]




