கொழும்பு மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து
கொழும்பு மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துள்ள நிலையில், கரும்புகை காற்றில் பரவி விமான போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து ஜகார்த்தா செல்லும் UL 364 விமானமும், ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு செல்லும் UL 365 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வளிமண்டலத்தில் நுழையும் எரிமலைச் சாம்பல் மற்றும் சிலிக்கா நிறைந்த பாறைத் துண்டுகள் விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு […]



