ஈரான் சிறையில் வாடும் பிரித்தானிய தம்பதியினர் – தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்வதாக தகவல்
பிரித்தானிய தம்பதிகளான லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரேக் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோர் ஈரானின் எவின் சிறையில் நீண்டகால உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளவு பார்த்த குற்றத்திற்காக அவர்களக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த தண்டனையை மறுத்து வருகின்றனர். லிண்ட்சே 66 நாட்களாகவும், கிரேக் 75 நாட்களாகவும் உணவருந்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இருவரும் தற்போது தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்வதோடு, கடுமையான உடல்நலச் சீர்கேட்டையும் சந்தித்துள்ளனர். பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காக கிரேக் […]



