இலங்கை செய்தி

சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

  • June 4, 2026
  • 0 Comments

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் […]

இலங்கை செய்தி

முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு! பணிப்பாளர் கைது!

  • June 4, 2026
  • 0 Comments

ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை. தீ விபத்து ஏற்பட்டவேளை அங்கு சுமார் 72 பேர்வரை இருந்துள்ளனர் என தெரியவருகின்றது. அதேவேளை, இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக, முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (04) ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

செய்தி வணிகம்

‘Lynas’ நிறுவனத்தின் இடைக்கால CEOவாக Pol Le Roux நியமனம்!

  • June 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனமான Lynas Rare Earths , தனது நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக Pol Le Roux எதிர்வரும் 30 ஆம் திகதி பொறுப்பேற்பார் என்று இன்று அறிவித்தது. சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய அரிய வகை மண் தாதுக்களை உற்பத்தி செய்யும் மேற்படி நிறுவனத்தில், தலைமைப் பதவி மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, தற்போது ஓய்வு பெறவுள்ள manda Lacaze இன் இடத்துக்கே […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 9 பேர் பலி!

  • June 4, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு குடியிருப்புகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்படி தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ தரப்பில் இருந்து […]

இலங்கை செய்தி

வடக்கு கல்வித்துறையை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

  • June 4, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐரோப்பா செய்தி

மாற்றமின்றி நீடிக்கும் பவுண்ட் மதிப்பு!

  • June 4, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு பாரிய மாற்றமின்றி நிலைபெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், மத்திய கிழக்கில் தொடரும் இராணுவ மோதல்கள் பணச் சந்தையில் ஒருவித பதற்றத்தைத் தக்கவைத்துள்ளன. அமெரிக்க டாலர் ஒரு பாதுகாப்பான முதலீடாக வலுப்பெற்று வரும் நிலையில், பிரிட்டனின் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் நாணயத்தின் மதிப்பை ஊசலாடச் செய்கின்றன. குறிப்பாக வர்த்தகர்கள் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் மிக நீண்டகாலம் பதவி வகித்த பிரதமர்: சாதனை படைக்கிறார் மோடி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியா வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அரசியல் சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார். இந்தியாவின் பிரதமராக 2014 மே 26ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை மக்கள் ஆணையுடன் பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் பதவியில் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பிரதமர் பதவியில் அவர் நிறைவு செய்யவுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே […]

இலங்கை செய்தி

எழுச்சி பாடல்: கிளிநொச்சி சொல்லிசை கலைஞருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட  கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக அவர்மீது காவல்துறையால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில்,  கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். அதனையடுத்து, இசை நிகழ்வில்  தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் ராணுவ இரகசியங்களை குறிவைக்கும் சீனா! உளவு பிரிவு எச்சரிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

பிரிட்டன் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்து, LinkedIn போன்ற வேலைவாய்ப்பு இணையத்தளங்கள் ஊடாக சீன உளவாளிகள் இரகசியத் தகவல்களைத் திரட்ட முயன்று வருவதாக MI5 எச்சரித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பைவ் ஐஸ்’ (Five Eyes) உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு இது தொடர்பான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன இராணுவ உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது சிந்தனைக் குழுக்களின் (Thinktanks) பணியாளர்கள் போல […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபய குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!

  • June 4, 2026
  • 0 Comments

“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாம் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. சிஐடியின் (குற்றப் புலனாய்வு திணைக்களம்) கோரிக்கையின் நோக்கம் பற்றியே தெளிவுபடுத்துகின்றோம். சுரேஷ் சலே இன்னமும் […]