அரசியல் இலங்கை செய்தி

“கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு”: சட்டமூலத்தின் பின்னணி என்ன?

“அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. எனவேதான் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளில் இணைவதை தடுக்கும் நோக்கில் கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிபோகும் சட்டமூலம் அவசரமாக கொண்டுவரப்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கூறியவை வருமாறு ,

“அரசாங்கத்தின் தற்போதைய பயணம் தவறு என்பது திசைக்காட்டியிலுள்ள கல்வி பின்புலம் உடைய எம்.பிக்களுக்கு தெளிவாக புரிகின்றது.

எனவே, இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிடக்கூடும், ஏனையக் கட்சிகளுக்கு செல்லக்கூடும்.

ஆகவேதான் அவர்களை பலவந்தமாக அரசாங்க பக்கம் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், கட்சி தாவினால் எம்.பி.பதவியை பறிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!