ஈரான் வீரர்களுக்குரிய விசாவை உறுதி செய்யுமாறு FIFA விடம் கோரிக்கை!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, தமது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா multiple-entry visa வழங்குவதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்ய வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் கால்பந்து அணி மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதால், அங்கிருந்து அமெரிக்காவிற்குள் எளிதாக வந்து செல்ல இந்த விசா அவசியம் எனக் கருதப்படுகிறது.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் தனது பயிற்சி முகாமினை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றியுள்ளது.
ஈரானிய வீரர்கள் தங்கள் நாட்டு விமானம் மூலமாகவே நேரடியாக மெக்சிகோ சென்றடைய ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் பிபா (FIFA) தலையிட்டு சுமூகமான பயணத்தை உறுதி செய்யும் என்று ஈரான் கால்பந்து சம்மேளனத் தலைவர் மெஹ்தி தாஜ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.




