நேட்டோவிற்கு எதிராக ரஷ்யா இரகசிய பயிற்சி – கோட்லாண்டை கைப்பற்றவும் முயற்சி
ஸ்வீடனின் கோட்லாண்ட் Gotland,தீவைக் கைப்பற்றுவதையும், நேட்டோவிற்கு எதிராகவும் உருவகப்படுத்தப்படும் போர் பயிற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டோசியர் நிலையம் Dossier Centre இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்திய பத்தாண்டுகளில், மென்பொருள் மூலம் மாதிரியாக்கப்பட்ட இந்த உருவகப்படுத்துதல்களில் 1,000 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான கற்பனையான போர்ச் சூழல்களும் இந்த போர் பயிற்சியில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பயிற்சிகளிலேயே உக்ரைன் முக்கிய இலக்காக மாறியதாகவும் டோசியர் சுட்டிக்காட்டியுள்ளது. […]




