விளையாட்டு

FIFA வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்கள்!

  • July 18, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு கோப்பையுடன் கூடுதலாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களையும்’ வழங்க கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வாறு மோதிரம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, இந்த ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் அணிக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. இருப்பினும், மேலும் 1,996 மோதிரங்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு விற்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்களின் மொத்த எண்ணிக்கை 2,026 என்பதும் குறிப்பிடத்தக்கது.