மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ‘தமிழினி’ என்ற படத்திற்கு ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். டி.பி. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் தற்போது ‘தமிழினி’ என்ற புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். ‘தமிழினி’ திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் பாலாஜி […]




