இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • October 22, 2026
  • 0 Comments

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வுத்துறை சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறைந்த காற்றழுத்தப் பகுதி மெல்ல வலுப்பெறும் எனவும், இதனால் 10 முதல் 20 டிகிரி வடக்கு அட்சரேகைகள் மற்றும் 80 முதல் 95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]