தெமட்டகொடவில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
தெமட்டகொடவில் உள்ள கலுபால பாலம் அருகே இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சாரதி முச்சக்கரவண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது அதில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



