தெஹிவளையில் வீடொன்றின்மீது கைக்குண்டு தாக்குதல்
தெஹிவளை, கவ்தனவில் உள்ள சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அச்சிறுவர்களின் தந்தை மற்றும் அவர்களது இரு சகோதரர்கள் சிகிச்சைக்காகக் கலுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் […]





