ஆஸ்திரேலியா உலகம் செய்தி

நிலையான அமைதி மலரட்டும்: ஆஸ்திரேலியா வரவேற்பு!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வருவது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ்நீரிணையை மீண்டும் திறப்பது சர்வதேச வர்த்தகப் பாதைகளைச் சீரமைக்க உதவும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. அணுசக்தி தொடர்பான கவலைகளுக்கு ஈரான் தீர்வு காண வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... உலகம் செய்தி

ஈரானும் பச்சைக்கொடி: 19 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

  • June 15, 2026
  • 0 Comments

அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈரான் இணங்கியுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.” என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குரிய அமைதி ஒப்பந்தம் எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இடையில் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி போர் தொடங்கியது. அதன்பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்ரல் 8-ம் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன், ஜப்பானுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • June 14, 2026
  • 0 Comments

பிரிட்டனும், ஜப்பானும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 18 பில்லியன் பவுண்டுகள் (£18bn) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிட்டன் பிரதமர் Keir Starmer , ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi ஞாயிற்றுக்கிழமையன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் Downing Street வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கடலோர காற்று ஆலை ஒப்பந்தம் உட்பட, வணிக மற்றும் அரசாங்க ரீதியிலான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய சிறுமிக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்!

  • June 14, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை, பாகிஸ்தானின் சக்வால் நகரில், Hania Ahmed என்ற சிறுமி காவல்து றையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கம் தெரிவித்துள்ளது. “இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் குறிப்பாக 9 வயது சிறுமியின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆசிம் சௌத்ரி […]

செய்தி விளையாட்டு

பிரேசிலுக்கு தடுப்பு அணை அமைத்த மொராக்கோ!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. ஆட்டத்தின் தொடக்கத்தில் இஸ்மாயில் சைபாரி மொராக்கோவிற்காக முதல் கோல் அடிக்க, பின்னர் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ஒரு அபாரமான கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். புதிய பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தலைமையில் களமிறங்கிய பிரேசில் அணி, நெய்மர் இல்லாத குறையை உணர்ந்ததோடு வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியது. கடந்த கால ஜாம்பவான்கள் […]

செய்தி விளையாட்டு

28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக் கனியை ருசித்த Scotland!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் திரும்பிய ஸ்காட்லாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து குழு ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பையில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், அந்நாட்டு ரசிகர்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெருமளவில் திரண்டு […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: ஹார்முஸ் நீரிணை திறப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். […]

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு நாளை சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகள்.... உலகம் செய்தி

அடுத்த 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எனினும், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளதென தெரியவருகின்றது. Nabatieh நகரம் உட்பட 20 இடங்களிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட வலயத்திற்குள் உள்ள Rihan மற்றும் Sujud உள்ளிட்ட பல கிராமங்களைக் குறிவைத்து […]

உலகம் செய்தி

உச்சத் தலைவரின் இறுதிச் சடங்கு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜுலை 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறும் என்று ஈரான் அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவரது மகன் முஜ்தபா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 70 இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்!

  • June 13, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தீவிரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்துக்குள் இந்த வான்வழித் தாக்குதல்களில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிர்த்தரப்பின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் முக்கிய கட்டடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மோதலில் பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஐந்து பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனான் இராணுவ வீரர் ஒருவரும் இந்தத் […]