உலகம்

சீனாவில் சாலை தடுப்பில் மோதி பேருந்து விபத்து – 06 பேர் பலி

  • July 16, 2026
  • 0 Comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து, மலைப்பாங்கான பாவோசிங் மாவட்டத்தில் உள்ள சோங்காங் (Zhonggang ) கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 17 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் இன்று காலை நிறைவடைந்த நிலையில், விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.