பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. இயற்கையாக நிகழும் இந்த சக்திவாய்ந்த பருவநிலை நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன் தீவிர வானிலை மாற்றங்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இதுவும் சேரும்போது, வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2027 […]

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அரசியல் இந்தியா செய்தி

தவெக அரசு வழங்கும் கார்களை நிராகரித்த திமுக எம்எல்ஏக்கள்

  • August 21, 2026
  • 0 Comments

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “ அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த […]

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • August 21, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசு போதியளவு நிதியை ஒதுக்கிச் செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார். வடக்கு […]

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் சலுகையை நிராகரித்த வடகொரியா: ஏவுகணைகளைச் சோதித்து அதிரடி

  • August 21, 2026
  • 0 Comments

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக, Ulchi Freedom Shield என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சற்று முன்பாக, பயிற்சியின் அளவை “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நாடு கடத்தலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா: 2,300 மெக்சிகோ பிரஜைகள் வெளியேற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இதன்படி, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் மெக்சிகோ குடிமக்களை நேரடியாக மெக்சிகோவிற்கு அனுப்பாமல், குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா நாடு கடத்தி வருவதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 2,300 மெக்சிகோ நாட்டவர்கள் குவாத்தமாலாவுக்கும், பல டஜன் கணக்கிலானோர் ஹொண்டுராஸுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். வழக்கமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மெக்சிகோ குடிமக்கள் […]

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

  • August 21, 2026
  • 0 Comments

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்​கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 33 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக தென்மாநிலங்கள் பங்​களிக்​கின்​றன. இதில் கர்​நாட​கா, நாட்​டின் மென்​பொருள் ஏற்​றும​தி​யில் 42 சதவீதத்​தை​யும், விமானத் துறை​யில் 60 சதவீதத்​தை​யும் அளிக்​கிறது. இருப்​பினும், 15-வது நிதி​யமைப்​பில் கர்​நாடகா​வுக்​கான நிதிப் பகிர்வு […]

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும் இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?

  • August 21, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. […]

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் இடம்பெறும் நான்காவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வந்த குவாண்டாஸ் (Qantas QF589) விமானம் ‘லிமா’ டாக்ஸிவே வழியே சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், மெல்போர்ன் செல்லவிருந்த மற்றொரு குவாண்டாஸ் (QF405) விமானத்திற்கும் அதே டாக்ஸிவேயில் நுழைய விமான […]

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக […]

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு “எந்தவொரு வழியிலாவது உயிர்நாடியாகச் செயல்படும்” நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், “பொருளாதாரப் போர்” முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஸ்காட் பெசென்ட் இந்த […]