பொலிவியாவின் இராணுவ முகாமில் வெடி விபத்து – 10 பேர் உயிரிழப்பு
பொலிவியாவின் வியாச்சா நகராட்சியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று வெடி விபத்தொன்று பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பதினான்கு பேர், மூன்றாம் நிலை தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்படும் பகுதியில் இந்த விபத்து நிகழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



