ஐரோப்பா

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவு

  • July 31, 2026
  • 0 Comments

பின்லாந்தில் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பன்றிகளிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உணவு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கு பாதிப்பில்லாத இந்த நோய், பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் கிட்டத்தட்ட 100 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளன. விரோலாஹ்டி  (Virolahti) மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு தொற்று மண்டலத்தை அந்த அமைப்பு வரையறுத்துள்ளது.