இலங்கை

இலங்கை ஊசியால் மற்றுமொருவர் உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்

இலங்கை ஊசி செலுத்திய மற்றுமொருவர் உயிரிழந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு ஊசியை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன் பின்னர் அவருக்கு 13 நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டது. இந்தா நிலையில், 14வது நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாக ஆண்டிபயாடிக் மருந்து இவ்வாறு கொடுக்கப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட 19 வது நோயாளி அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக காணப்பட்ட காரணத்தால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கேகாலை ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 57 வயதான கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்